பெருமாள்முருகனின் ஆறாவது நாவல் இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக் கொள்ளலாம்; பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப்...
பால்யத்தையும் இளமையின் எச்சங்களையும் தொடர்ந்தெழுதும் தமிழ் வழமையிலிருந்து விலகிச் சமகாலத்தைப் புனைவாக்கிப் பெருமாள்முருகன் முன்நகர்ந்திருக்கிறார். ஆவணப்பதிவின் நம்பகத் தன்மையைத் தாண்டிக் கலை நுண்மையின் அடியாழங்களுக்குள் ‘கழிமுகம்’ பயணிக்கிறது. ஒரு தந்தை மகன் உறவுக்குள் நவீனச்...
‘பூக்குழி’யின் மூன்றாம் பதிப்பு இது. வாழ்வை ஒருகோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும் கொண்டுவந்து முரண்களைக் கூர்மையாக்கிக் காட்டும் தன்மையில் எழுதப்பட்டது இது. பருண்மையல்லாத கருத்துக்களின்மீது நாம் கொண்டிருக்கும் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும்...
புதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்? மனிதர்களைப் பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர வாழ்க்கையும் கொஞ்சம் பழக்கம்தான். இப்போதைக்குத் தொட்டுக்கொள்ளலாம். சரி, விலங்குகளைப்...
மண் கொண்டு சிற்பங்களை உருவாக்கும்போது ஒன்றில் கைகளை முடமாக்கியும் ஒன்றில் வெறும் முண்டமாகவும் ஒன்றில் முகத்தை மழுக்கியும் அரைகுறையாக விட்டுவிட்டேனோ? முழுமையாகாத அவை பிசாசுகளின் ரூபம் பெற்று என்னை அந்தரத்தில் தூக்கி நிறுத்தி அங்கிருந்து...