₹180.00Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
இத்தொகுப்பிலுள்ள 12 கதைகளின் கதைக்களங்களும் சரி; கதை மாந்தர்களும் சரி; யாருமே நமக்குப் புதியவர்களாகவோ, அந்நியமானவர்களாகவோ இல்லை. நம் வாழ்வின் கதைக்களங்களாகவே இக்கதைகளின் கதைக்களங்கள் உள்ளன. நமக்கு நன்கு அறிமுகமானவர்களாகவே இக்கதைகளின் மாந்தர்கள் இருக்கிறார்கள்...
பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும்பினியாரின் சத்திர நீதிமன்றக் காவல்துறையில் ‘இரண்டாவது நயினார்’ என்ற பொறுப்பான பதவி வகித்த வீராநாய்க்கர் எழுதிய நாட்குறிப்பு – சரித்திரமாக...
நவம்பர் 1936 முதல் டிசம்பர் 1984 வரையில், ‘மணிக்கொடி’ முதல் ‘எழுச்சி’வரையில் எம்.வி. வெங்கட்ராம் எழுதிய நூற்று ஆறு சிறுகதைகளின் காலவரிசைத் தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது. பல்வேறு பழைய பத்திரிகைகளிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட எம்.வி.வி.யின்...
மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று – மண்ணின் மக்கள் வேரற்று அலைந்து புகலிடம் தேடியதுதான். காலூன்றிய நிலத்திலிருந்து பெயர்ந்து முற்றிலும் அந்நியமான இடங்களில் அவர்கள்...
இந்த நாவலின் களம் தற்செயல் நிகழ்வுகளின் சூதாட்டம். சூதாட்டத்தில் சாதகமும் பாதகமும் நடக்கலாம். பெரும்பாலான நிகழ்வுகள் தற்செயலாக நடக்கின்றன. முடிச்சுகள் சுலபமாக அவிழ்கின்றன. கதாபாத்திரங்கள் பழமைவாதம் அற்றவர்களாக இருக்கிறார்கள். இன்னொரு புறத்தில் ஒரு மாயக்...
பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில், கோடை மலையின் உள்ளடங்கியதொரு பகுதியில் தனித்திருக்கும் கிருத்துவ தேவாலயம் ஒன்றில் நடக்கும் இரகசியமான ஆராய்ச்சியையும் அதைப் பற்றி எழுதப்படும் குறிப்புகள் அடங்கிய பிரதி விந்தையான வகையில் மறைந்து போவதையும்...
1943 – 1983 கால அளவில், ‘கிராம ஊழியன்’ முதல் ‘அமுதசுரபி’ இதழ் முடிய கரிச்சான் குஞ்சு எழுதிய – தொண்ணூற்றொன்பது சிறுகதைகளின் காலவரிசைத் தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது. பல்வேறு பழைய இதழ்களிலிருந்து புதிதாகக்...
பேராசிரியர் க. கைலாசபதியின் சரளமான தமிழில் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் புதுமை குன்றாத இலக்கியச் சமூகவியல் நூல் இது. சமூகவியல் துறையின் தோற்றத்தையும், சமூக மாற்றப் போக்கைக் கருதாத ‘தூய’ சமூகவியலின் போதாமைகளையும் விளக்கி,...
மதிப்புரைகள், விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல், வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுதல் என்னும் முறையில் பல்வேறு நூல்களை அசோகமித்திரன் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார். தான் வாசித்த ஒரு நூலை முன்வைத்துத் தன்னுடைய இலக்கிய மேதமையைப் பறைசாற்றிக்கொள்ளும்...
பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிருக்கும் ஆர். சிவகுமாரின் முதல் படைப்பெழுத்து ‘தருநிழல்’. பெரும்பாலான எழுத்தாளர்களின் முதலாவது நாவல், அவர்களது வாழ்வனுபவங்களின் குறிப்பாக, அவர்களுடைய தனி ஆளுமை...