Description
பல்வேறு சான்றோர்களைப் பற்றித் தாம் எழுதிய கட்டுரைகளைப் பல இதழ்களின் வாயிலாக வெளியிட்டுள்ள பேராசிரியர் “சான்றோர்… பாலர்” என்ற தலைப்பில் ஒரு நூலாகத் தொடுத்துள்ளார். அத்தனை சான்றோர்களும் எழுத்துப் பணி, இலக்கியப் பணி, சமூகப் பணி, தேசியப் பணி ஆகியவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பெருமைகளை இத்தொகுப்பில் எடுத்துரைக்கின்றார் பேராசிரியர்.
n
n
n
n
n
nதாம் அறிந்து கொண்டவற்றை, அனுபவித்துப் பெருமை கொண்ட செய்திகளை இத்தொகுப்பில் தந்துள்ளார். சில பெருமக்களோடு பழகிய பாங்கினையும் எடுத்துரைக்கின்றார். ஆழ்ந்த அறிவாற்றலோடு நினைவாற்றலும் பெற்றவர் திரு. இராகுலதாசன் அவர்கள் என்பதைக் கட்டுரைகளை நாம் படிக்கும் போது உணர முடிகிறது. இந்த உணர்வை அவருடைய எழுத்தின் மூலமாகவே உணரலாம்.
n
n
n
n
n
nசான்றோர்கள் சான்றோர் பக்கமே சார்ந்திருப்பார்கள் என்பதாகவும் சான்றோரைச் சார்ந்தவர்கள் அந்தச சான்றோர்களின் சிந்தனையோடும் நெருங்கியவர்களே என்பதாகவும் இத்தொடர் அமைகிறது. அந்த வரிசையில் பேராசிரியர் பழநி இராகுலதாசன் அவர்களும் சான்றோர் பாலராகவும் திகழ்வதை இந்தத் தொகுப்பு நூலின் வழியாக நாம் அறியலாம்.
n
n
Reviews
There are no reviews yet.