Description
பாதாள கரண்டி
வாழ்க்கை எனும் கலைடாஸ்கோப்பில் காலத்தையும் மன நிலைகளையும் போட்டு சுழற்றி சுழற்றி கதைகளை சித்திரங்களாக காட்டுகிறார் கண்மணி ராஜாமுகமது, நீங்கள் யூகிக்க முடியாத முடிவுடன் வாசிப்பு அனுபவத்தை தரக்கூடிய சிறுகதை ஒவ்வொன்றும் ஒரு குறும்பட அந்தஸ்தை பெறுகிறது. கதைகளன், காட்சி வர்ணனையில் ஒரு திரை இயக்குனரின் சாதுர்யம் மிளிர்கிறது.
சுய சாதி, மதத்தில் நிலவும் இலைமறைவு காயாக இருக்கும் அபத்தங்களை இயலாமைகளை விவாதிப்பதன் மூலம் ஒரு நல்ல எழுத்து கலைஞனாய் பிம்பம் கொள்கிறார் கண்மணி ராஜாமுகமது.
பாதாளக் கரண்டி ஒரு படிமமாகி நம்முள் புதையுண்டு போன நம்மை துழாவிக் கொண்டுவந்து நமக்கு காட்டுகிறது. வாசகனே ஒரு கிணறாகி சாட்சியாகிறான் இக்கதைகளில்…
வெவ்வேறு விதமான பயணங்கள் இந்த தொகுப்பு முழுக்க வியாபித்துள்ளது. மானுடத்தின் பேரால் உங்கள் கரம் பிடித்து இந்த பயணத்தில் இணைத்துக்கொள்ளும் கண்மணி ராஜாமுகமது இந்த நூலின் மூலம் ஆக சிறந்த எழுத்தாளராக கதைவெளியில் குறித்துக்கொள்ளப்படுவார்.
எழுத்தாளர் அமிர்தம் சூர்யா
(மேனாள் தலைமை துணையாசிரியர் – கல்கி வார இதழ்)
கண்மணி ராஜாமுகமது
திரைப்பட கதை, வசனகர்த்தா-கவிஞர், எழுத்தாளர். காகிதத்தில் காதல் செய்து, பால்யகால சொர்க்கவெளி, மலர்க்கிரீடம், நீங்கள் அறைவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை. கண்மணி ராஜாமுகமது கவிதைகள், மனசுக்குள் ஒளித்துவைத்த மயிலிறகு வரிசையில் இது இவரது ஏழாவது படைப்பு.
Reviews
There are no reviews yet.