நூல் முழுவதுமாக ஊடாடும் பார்வை தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு செல்வங்களை அறிந்து துய்த்தல் என்பது. தமிழ்ப் பெருமை பேசுவதாகவோ வெறும் தகவல் அடுக்காகவோ எந்தக் கட்டுரையும் இல்லை. ஒவ்வொரு கட்டுரையிலும் தகவல்களும் பார்வையும் இயைந்திருக்கின்றன. மதுரை மாநகரம் பற்றிய கட்டுரை வரலாற்றில் தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமாக அது தொடர்ந்து விளங்கிவருகிறது என்னும் பார்வையை முன்வைக்கிறது. தமிழக வரலாற்றில் இடையறாது தொடர்ந்து பதிவுபெற்றுள்ள நகரங்கள் மதுரையும் காஞ்சிபுரமும்தான் என்னும் முக்கியமான தகவலைக் கட்டுரை போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறது. தொ.ப.வுக்கே உரிய அடையாளங்கள் கட்டுரைகளில் மிளிர்கின்றன. தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வரலாற்றைப் பருந்துப் பார்வையில் காட்டும் நூலாகப் பொதுவெளியில் இதைச் சுட்ட விரும்புகிறேன்.
Reviews
There are no reviews yet.