இந்து – முஸ்லீம் மக்களிடையே நிகழ்ந்த மதக்கலவரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது ‘மூட்டம்’ எனும் புதினமாகும்.
மேலப்பாளையம் எனும் கிராமத்தில் உள்ள மசூதியை யாரோ இடித்துவிடுகின்றனர். அதனால் அங்குள்ள இந்து மக்கள் மீது முஸ்லீம்களுக்கு கோபம் உண்டாகிறது. இதனால் அப்போது வெகுண்டெழுந்தவர்கள் அங்கு வந்த முத்துக்குமார் என்ற இளைஞனை வெட்டுவதற்கு செல்கின்றனர். அவர்களிடமிருந்து முத்துக்குமாரை,
“முத்துக்குமார் கண்ணடிப்பதா? இவன் நடிக்கான்! இவனைத்தான் முதல்ல முடிக்கணும். பொல்லாத போக்கிரி. காதர்பாட்சா இப்போது கூட்டத்திலிருந்து விடுபட்டு, முத்துக்குமாரின் முன்பக்கம் தனது முதுகைச் சாய்த்தபடியே சர்வசாதாரணமாகக் கேட்டான்.
“யாராவது இவனை வெட்டணுமின்னா வெட்டுங்க! அப்படி வெட்டினால், அவன் தலையோட என் தலையும் சேர்ந்துதான் விழும். முத்துக்குமார் உணர்ச்சிப் பெருக்கில் பாட்சாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு விம்மி விம்மி அழுதான்” என்பதிலிருந்து காதர்பாட்சாவின் சகோதரத்துவ / மதநல்லிணக்க சிந்தனையை அறியமுடிகிறது. இச்சிந்தனை அனைவரிடமும் மேலோங்க வேண்டும்.
Reviews
There are no reviews yet.