தஸ்தயேவ்ஸ்கியின் ஆரம்பகாலப் படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். 1848ஆம் ஆண்டு வெளியாகி உள்ளது. 170 ஆண்டுகள் கடந்தபோதும் இன்று வாசிக்கையிலும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயத் துடிப்பும் காதலின் பித்தேறிய மொழிகளும் புத்தம் புதியதாகவே இருக்கிறது. உலகில் தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வரும் அரிய காதல்கதை இது. இரண்டு ஆண்கள் ஓர் இளம் பெண் மூன்றே முக்கியக் கதாபாத்திரங்கள்..! நான்கு இரவுகள் ஒரு பகலில் கதை முடிந்துவிடுகிறது. கதை முழுவதும் ஒரே இடத்தில் ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்கிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். முடிவில் காதல் என்ன ஆனது என்பதே கதை
Reviews
There are no reviews yet.