மரபார்ந்த குடும்பச் சட்டகங்களுக்கும் நவீன சமூகத்தின் மாறிவரும் மதிப்பீடுகளுக்கும் நடுவே தம் தனித்துவத்தையும் இருப்பையும் பொருண்மையுடன் தக்கவைத்துக்கொள்ள இடையறாது முயலும் பெண்களின் சித்திரங்களே இக்கதைகள். குலைந்திருக்கும் உறவுகள் சார்ந்த சமன்பாடுகளை, கரிசனத்துடன் சுட்டி நிற்பதின் வழியாகச் சமகால வாழ்வில் கவிந்திருக்கும் வெறுமையைப் புரிந்துகொள்ள இவை உதவுகின்றன. லாவண்யா சுந்தரராஜன்: லாவண்யா சுந்தரராஜன் (பி. 1971) திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறியில் பிறந்தார். பெங்களூரில் வசிக்கிறார். மென்பொருள் நிறுவனமொன்றில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிகிறார். ‘நீர்க்கோல வாழ்வை நச்சி’ (2010), ‘இரவைப் பருகும் பறவை’ (2011), ‘அறிதலின் தீ’ (2015) ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள். இந்நூல் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. மின்னஞ்சல் :lavanya.sundararajan@gmail.com வலைத்தளம்: uyirodai.blogspot.com