‘இதய ஒலி’ டி.கே.சி.யின் புகழ்பெற்ற கட்டுரை நூல். கவிதையைக் கொண்டு கவிஞர்களின் உள்ளொளியைத் தேடிய ஒரு சுவைஞனின் வார்த்தைப்பாடுகள். தாய்மொழிதான் உள்ளத்தை வெளிப்படுத்த ஏற்ற மொழி என்பதை மனப்பூர்வமாக உணர்ந்த ஒரு இலக்கியவாதியின் மன்றாட்டுகள். கூர்ந்து படிக்கும் ஒருவருக்கு கட்டுரையில் டி. கே. சி. பேசும் கவிதை மனப்பாடமாக ஆகிவிடும். உள்ளத்தின் உண்மை ஒளி இக்கட்டுரைகள்.