அடிப்படையான மானுட உணர்வுகளின் எல்லையின்மையைத் தம் புனைகதைகளில் திரும்பத் திரும்ப எழுதிய தி. ஜானகிராமன், ஆண் பெண் என்ற வெளிபேதத்தைக் கடந்து உயிர் என்ற உள்விரிவை நோக்கி முன்நகர்ந்தவர். நூற்றாண்டு காணும் தி.ஜா. (1921 – 2021) பற்றிய 102 விமர்சனக் கட்டுரைகளின் பெருந்தொகுதியே இந்நூல். அழகியல்வாதிகள், இடதுசாரிகள், திராவிடவியலாளர்கள், பெண்ணியவாதிகள், உளவியல் நோக்கினர், விளிம்பைப் போற்றுவோர், நவீனத்துவர்கள், பின்நவீனர்கள், கல்வியாளர்கள் எனத் தம்முள் முரண்படும் பல தரப்பினரையும் ஒன்றிணைக்கும் ஒரு மகத்தான விசையாகத் தி. ஜானகிராமன் மறுஉயிர்ப்புப் பெறுவதன் சாட்சியமாகிறது இந்நூல்.