மரபிலக்கியங்கள்மீது நவீனப் பார்வையைத் தொடர்ந்து உருவாக்கி வருபவர் பெருமாள்முருகன். கொங்குமண்ணின் மொழியே இவரது எழுத்தின் ஆன்மா. பெரும் சர்ச்சையில் சிக்கி மீண்ட இவர் படைப்புகள் இலக்கியப்பூர்வமாக மீள்வாசிப்புச் செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இத்தொகைநூல். பல தன்மைகளுடனமைந்த நூலின் கட்டுரைகளை ஒரு சேரவாசிக்கும் போது புதிய திறப்புகளுக்குள் அவ்வாசிப்பு நம்மை இட்டுச் செல்கிறது.