நல்லோர்களை பெற்றோர்களாய் வாய்க்கப்பெற்றவர்களும், ஊர் மெச்சும் மக்கட்பேறு பெற்றவர்களும் கொண்ட பெருமைக்கு நிகரானது நல்லாட்சி புரியும் ஆட்சியாளரின் ஆளுமைக்குட்பட்ட நிலத்தில் வாழ்வது.
அப்படியான பெருமிதத்தை தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகன் மனதிலும் விதைத்திருக்கும் உன்னத முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மாபெரும் பொற்கால ஆட்சியினைப் பற்றி எடுத்தியம்பவும், சீர்மிகு ஆட்சியை சிறப்புடன் நடத்தி இந்தியாவிற்கே முன்மாதிரியாய் விளங்கும் தலைவனைப் பற்றி பன்னாட்டுத் தமிழ் அறிஞர்கள் தங்கள் கவிதைகளாலும், கட்டுரைகளாலும் பெருமை சேர்க்கவும் ஒன்றிணைந்ததன் பொருட்டு இந்நூல் அழகிய வடிவம் பெற்று இன்று உங்கள் கைகளில் தவழ்கிறது .