படைப்பிலக்கியம் சார்ந்தே மிகுதியும் எழுதிவரும் அரவிந்தன் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் நிகழ்த்துக்கலைகள் குறித்தும் எழுதிய கட்டுரைகள் இவை. வெகுஜனத் திரைப்படங்களைக் கறாராக மதிப்பிடும் இந்தக் கட்டுரைகள் அவற்றின் வணிகம் சார்ந்த வரையறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. தமிழில் கலை சார்ந்த முயற்சிகள் மிகவும் குறைவாகவும் போலித்தனமான பாவனைகள் அதிகமாகவும் இருப்பதை அம்பலப்படுத்துகின்றன. திரைப்படங்களில் வெளிப்படும் சமூகப் பார்வையில் தெரியும் போதாமைகளையும் சாதி உணர்வுகளையும் சுட்டிக்காட்டுகின்றன. இந்தச் சூழலில் சற்றேனும் நம்பிக்கை தரும் படைப்பாளிகளையும் கவனப்படுத்துகின்றன.