தன் வாழ்க்கைப் பயணத்தில் வழிகாட்டியாக விளங்கிய பதினொன்று ஆசான்களைப் பற்றிய நினைவுகளை இந்தப் புத்தகம் மூலமாக திரு. பி. ஏ. ராமசந்திரன் பகிர்ந்தளிக்கிறார். வியாசர் முதல் குமாரன் ஆசான் வரை நீளும் இந்த வரிசையில் ஆன்மீக ஆச்சாரியர்களான சங்கராச்சாரியாரும் ஶ்ரீ நாராயண குருவும் சுவாமி விவேகானந்தரும் பிரவேசிக்கிறார்கள். உலகப் புகழ் பெற்ற இலக்கிய அறிஞர்களான காளிதாசனும் ஷேக்ஸ்பியரும் ரவீந்திரநாத் தாகூரும் நினைவுகூரப்படுகிறார்கள். நாத பிரம்மத்தின் பெருங்கடலைக் கடந்த தியாகராஜரும் அகிம்சை என்கிற பேராயுதத்தால் அந்நியர்களின் ஆயுதக் கிடங்குகளைத் தீயிட்டு கொளுத்திய மகாத்மா காந்தியும் மலையாள மொழியின் தந்தை என்றழைக்கப்படும் துஞ்சத்து எழுத்தச்சனும் இங்கு விவாதிக்கப்படும் ஆளுமைகள். இப்புத்தகம் மேற்குறிப்பிட்ட மகா தேரோட்டிகளை பற்றிய நினைவஞ்சலிகளோ, வாழ்க்கை வரலாற்று குறிப்புகளோ மட்டுமல்ல. அவர்களின் தொண்டு மார்க்கங்களின் ஊடான ஒரு முழுமையான பயணம்.