மூன்றாண்டுகளில் ஐந்து பதிப்புகள் கண்ட ‘உணவே மருந்து’ நூலின் இரண்டாம் பாகம் இந்நூல். உடலை அன்னமய கோசம் என்று அழைக்கிறோம். இந்த அன்னமய கோசத்தைப் பாதுகாக்க முறைப்படி உண்ணுதல் என்பது அவசியமாகிறது. சாப்பிட்ட உடனே சாப்பிடுதல் எனும் அத்யசனம், ஆகார விதிகளை மதிக்காமல், கை, கால் கழுவாமல், காலம் தவறி பாடிக்கொண்டு, சிரித்துக்கொண்டு உண்ணும் விஷமாசனம் தவிர்க்கப்பட வேண்டும் என்று சாஸ்திரங்கள் போதிக்கின்றன. இறைவன் உணவைச் செமிக்கின்ற அக்னி வடிவமாக வைச்வானரனாக இருக்கிறான் என்று இந்து சமய அற நூல்களும் போதிக்கின்றன. இந்நூலில் பண்டையத் தமிழரின் உணவு, உணவுப் பழக்கம், ஐவகை நிலங்களில் விளையும் உணவுகள், உணவுப் பொருட்களின் தனிப்பட்ட குணங்கள், சமையல் குறிப்புகள் போன்ற விவரங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. முன்னூறுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயாரிக்கும் முறைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.