மனிதர்கள் எல்லோருக்குமே இரண்டு முகங்கள் உண்டு. எம்முகத்தைக் காட்ட வேண்டுமென்பதில் உள்ள தேர்வே நமக்கு ‘இத்தகைய மனிதன்’ என்ற அடையாளத்தைப் பெற்றுத் தருகிறது. பெரும்பாலான சமயங்களில் நம் பிடியில் இருக்கும் தேர்வு, அசாதாரண சந்தர்ப்பங்களில் கை நழுவிவிடும். அசாதாரண நேரங்கள் என்பதற்கு பல விளக்கங்கள் கொடுக்கலாம். தனியாக இருக்கும் போது ஒழுங்காக இருக்கும் மனம் கூட்டமாக சேரும்போது வேறொன்றாகிவிடும். அல்லது கூட்டமாகவே இருக்க பழக்கப்பட்ட மனம் தனியாக இருக்கும்போது முழுவதும் மாறி நிக்கும். இவைப்போல் இல்லை நான் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருப்பவன் என்று ஒருவர் சொல்லலாம். அவரின் அன்றாடங்களில் எவ்வித மாற்றங்கள், இடையூறுகள் ஏற்படாதவரை அவர் சொல்லியது சரியாக இருக்கும். எப்போது அதில் ஒரு அடி விழுகிறதோ அப்போது அவரே நம்ப முடியாதவண்ணம் அவர் மாறத்தொடங்குவார். அப்படி ஒருவரின் கதைதான் சுரேஷ் ப்ரதீப்பின் ‘உடனிருப்பவன்’ கதை.
– எழுத்தாளர் சங்கரன்