நவீன நடைமுறைகளினூடே தத்தளிக்கும் மனிதச்செயல்களின் அகவெளியை பொதுத்தளத்திற்கு அப்பாற்பட்ட சுயதரிசனமாக அடையாளங்கான விளைகின்றன ரேவாவின் கவிதைகள். வாசகனை விரல்பிடித்து உடனழைத்துப் போகும்போதே, திடீரென முளைக்கிற கிளைப்பாதையில் தனித்துப் பயணிக்க விட்டுவிடவும் செய்கின்றன.