இந்த அறிவியல் கட்டுரைத் தொகுப்பு வாயிலாக நான் என் ரசனையைத் தான் பகிர்ந்து கொள்கிறேன். அறிவியலை அத்துனை வியப்போடு அணுகுகையில் அதைத் தெரிந்து கொள்ளுதல் இலகுவாகும். நம்மில் பலர் அதை மிரட்சியோடே அணுகுகிறோம். மேலும் ஒவ்வொரு அறிவியல், தொழில்நுட்பத்திற்குப் பின்னும் வரலாறு இருக்கிறது. ஒவ்வொரு முக்கிய வரலாற்று நிகழ்வுக்குப் பின்னும் ஒரு அறிவியல் தொழில்நுட்ப மைல்கல் இருக்கிறது. பொருட்கள் மற்றும் நிகழ்வுகளின் பின்னுள்ள அறிவியல் இரண்டையும் தேடி ரசிக்கிற என் ரசனையின் தொகுப்பே இப்புத்தகம். ஒரே ஒரு நபரை இந்தப் புத்தகம் பொருட்களின் அறிவியலை அதன் வரலாற்றை ரசிக்கும்படி மாற்றினாலும் அதை என் வெற்றியாகக் கருதுவேன்.