சத்தாரின் கதாபாத்திரம் உங்களுக்குப் பிடித்து இருந்தால் கண்டிப்பாக இந்தப் புத்தகத்தை ஒரு முறை வாசியுங்கள்.
சத்தார் போன்று இன்னும் பல கதாபாத்திரங்களை அழகுற வடிவமைத்து இருக்கிறார் ஷான்.
இளவரசன், பழனியம்மாள் என்ற இரண்டு கதாபாத்திரங்களும் என் மனதில் நின்றவை.
ஒவ்வொரு கதையின் முடிவிலும் அந்த கதையைச் சுற்றி மனம் வட்டமிட்டுக் கொண்டு இருக்கும் வண்ணம் உள்ளது.
தற்கொலை முடிவில் உள்ளவர்களுக்கு இறுதியில் அவர்களுடன் பேச ஒருவர் இருந்து இருந்தால் அவர்கள் தப்பி இருப்பார்கள் என்று கூறுவார்கள்.
சாத்தானின் மடி அதற்கு ஒரு பெரிய உதாரணம்.
பல தரப்பட்ட உணர்வுகளின் கிளர்ச்சி, தங்கம் மற்றும் பிற கதைகள்.
– தங்கம் சிறுகதை தொகுப்பு குறித்து