மருத நிலத்திலும் நெய்தல் நிலத்திலுமாக சொல்லப்பட்ட கதைகள் இவை. எளியோர்களின் வாழ்க்கை நிலத்தோடும் கடலோடும் எப்படி பிணைக்கப்பட்டுள்ளது என்பதையும் கரடுமுரடானதாகவும் திண்டாட்டத்திடனும் கழிக்கின்ற அன்றாட வாழ்விலும் சமன் குலைக்கத் தயாராக இருக்கின்ற இயற்கைப் பேரிடரும் அதற்கு நிகரான மனப்போராட்டங்களையும் இணைத்துப் பின்னப்பட்டுள்ள கதைக்களங்கள். பறவைகளாலும் மீன்களாலும் சாராய நெடியாலும் களைத்துப் போகாத ஒரு விடை தெரியாத பயணத்தை இலக்கியமாக்கியிருக்கிறது.
– ஜீவ கரிகாலன்