அடர்த்தியான 25 நேர்காணல்களுடன் வெளிவந்திருக்கிறது ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’. கடந்த எழுபது ஆண்டுகளில் மலேசிய இந்தியச் சமூகம் கொண்டிருந்த பல்வேறு முகங்களைப் படைப்பாளிகளின் அனுபவங்கள் வாயிலாகப் பதிவு செய்திருக்கிறார் ம.நவீன்.
தமிழ் இலக்கியம் மலேசியாவில் நிலைபெற்ற கதை, சமகால அரசியல், கலை இலக்கிய முன்னெடுப்பு, சயாம் மரண ரயிலில் மலேசிய இந்தியர்கள் அனுபவித்த கொடுமைகள் முதல் ஹிண்ட்ராப் போராட்டம் உருவாக நவீன மலேசியாவில் தமிழர்கள் அனுபவித்த அழுத்தங்கள், தோட்டப் பாட்டாளிகளின் வரலாறு, மலேசியத் தொழிற்சங்கத்தின் வரலாறு, மே 16 இனக்கலவரம் குறித்த நினைவுகள் என நேர்காணல்கள் விவரிக்கின்றன.