“பதிமூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் “யாரும் அற்ற” சீடனொருவனுக்கும் “யாவும் ஒன்று” என்பதை, தன் மார்க்கமாகக் கொண்ட ஆசானொருவருக்கும் இடையே நடைபெற்ற வாழ்வியல், தத்துவ பரிமாற்றத்தின் நூற்றியெட்டு பதிவுகள் இவை. பழந்தமிழ் மரபின் ஆசான்/சீடன் உறவு, சமஸ்கிருத ஆசாரத்தின் பிரஷ்நோத்தர் விதி, அரபுலகின் மசலா வடிவம், ஜென் மரபின் சென்ஸாய்/ ஓஷோ பாரம்பரியம் கலந்த நீட்சியாகவும் அதினின்றும் முயங்கி தனித்ததோர் வடிவம் கண்டடைந்தவை இந்த உரையாடல்கள். எளிமையாக…. ஓர் உரையாடல் பிரதி… நம்மோடு உரையாடும் பிரதி…