ஒரு நகரம் பெரு நகரமாகும்போது மிக இயல்பாக மாற்றங்கள் நிகழ்கின்றன. மனிதர்களால் அந்த மாற்றங்களை சுலபமாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.. அதற்காக மாற்றங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியுமா? தமிழ்நாட்டுக் கிராமம் ஒன்றிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயரும் குமரவேல் தனது கிராமத்தை விடவும் முடியாமல், பெங்களூரை முழுமையாகத் தழுவவும் முடியாமல் இறுதி வரை தத்தளிப்பதைச் சொல்கிறது இந்த நாவல்.. இதில் இவரோடு பலர் தத்தளிக்கிறார்கள். அவர்கள் சில சமயங்களில் தங்களது தத்தளிப்பை ரசித்து அனுபவிக்கவும் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்த தத்தளிப்பு கிராமத்தையும், நகரத்தையும் தாண்டி வெகு தொலைவு செல்கிறது. எல்லைக் கோட்டிற்கு அப்பாலிருக்கும் சூனியத்தை நெருங்கும்போது அவர்களது தத்தளிப்புக்கு மட்டுமல்லாமல் அவர்களைக் கடந்து சென்ற பிற எல்லாவற்றுக்கும் பொருள் என்ன என்று கேட்கிறது இந்தப் புதினம்.