போருக்குப் பிந்தைய ஈழச் சமூகம் சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு தன் பழம் பெருமைகளை அசை போடுகையில் அதில் மீண்டும் சாதி, தீண்டாமை ஓர்மைகளுக்கும் ஒரு இடம் இருப்பதையும் இதை எதிர்கொள்ள இப்போதும் தீண்டாமை ஒழிப்பு குறித்த பிரக்ஞை மற்றும் செயல்பாடுகளின் தேவை உள்ளதையும், ஆனால் அது உறுதியாகப் பழைய வடிவில் இருக்க இயலாது என்பதையும் சுட்டிக் காட்டுவதோடு அடையாளப்படுத்தவும் செய்கிறார் இந்நூலாசிரியர் யோகராஜா – அ. மார்க்ஸ்