அவளோட லூஸ் ஹேர் கூட்டத்துல ஒரு இழையாப் பெறந்திருக்க வேண்டிய பெறவி, அடிக்கடி அவ தன் கையால தடவி விட்ருப்பா. போதவே போதும். இப்டிப் பாழும் ஆம்பள ஜென்மம் எடுத்துப் பின்னாடியே அலைஞ்சிருக்கத் தேவையில்ல. மீன்லேருந்து, கொசுலேருந்து, யானையிலேருந்து, பாம்புலேருந்து சிரிப்பு கெடையாது, காதல் கெடையாது. மனுஷன் மட்டும்தான் காதலிச்சு சிரிப்பா சிரிக்கிறான்