ஒரு பெண்ணுக்கு குடும்பம் என்பது அவளது வழிநடையில் சந்திக்கும்
ஒரு சம்பவம்தான். அதைக் கூட்டிக்கொண்டு செல்வது ஒன்றும் தியாகமோ,
புனிதமோ அல்ல. அதுவொரு சமூகப் பொருளியல் அம்சத்தின் வரவு
செலவுத் திட்டம். அது எப்படி பெண்களுக்கு மட்டும் காலாதீதமான
அடிமைத்தனம் ஆகிறது? இவ்வாறு அதிகபட்ச ஒழுங்கியலாக வரலாற்றில்
கட்டமைக்கப்பட்ட ஒன்றை அவிழ்த்து நிராகரிக்கும் கவிதைகளே லாந்தரின்
தனிச்சிறப்பு.
‘மலைகள் அப்பனாக இருக்கட்டும்
அதை உடைத்து அப்பனைக் கொன்று
பல்லாயிரம் மகவுகளைச் சமைப்போம்’
‘பூஜ்ஜியத்தை நேசிப்பதால் எனக்கு வெட்கமில்லை’ என்று பல
தீவிரமான வாசகங்களை எழுதும் லாந்தரின் மொழியின் முன்பு இந்தச்
சமூகம் பல கல்லெறி தூரங்களைக் கொண்டிருக்கிறது.
– கவிஞர் யவனிகா ஸ்ரீராம்