மக்களே செல விசயங்க நம்ம கைல இல்ல பாத்துக்கோ, அது தானா நடக்கும். அத அப்படியே விட்றனும். அது அப்படி இருந்தாத்தான் அழகு, அப்படிதான் நெலைக்கும் பாத்துக்கோ, இந்தக் கேசவனப் பாரு, அவன் கன்னுல தெரிய கருணைய நா வரஞ்சிற முடியுமா? இல்ல. எவனாம் வரஞ்சிற முடியுமா சொல்லு. அவன் போய்ட்டாலும் நம்ம மேட்டுல கைல இல்ல பாத்துக்கோ. பின்ன, நம்ம பௌதியம்மய அது கோயில்ல பிரதிஷ்டை செய்ய மாதிதான் பாததுக்கோ” ஒவ்வொரு தடவயும் உயிரோட எந்திச்சி வாராம்லா? அது நம்மவரையதெல்லாம் ஒரு கனவாக்கும். எப்படித் தொடங்கும். எங்க போயி முடியுமனு சொல்லிற முடியாதுல்லா?