ஜீவ கரிகாலனின் தூத்துக்குடி கேசரி…
செம ஜாலியான கதை…
ஜாலியாக சமையல் செய்யும் செட்டியைத் தேடி இருவர் வரக்காப்பி குடிச்சுட்டு மட்டப்பாறை தாண்டி திருக்கம்பட்டி, சல்லகுளம்,மார்க்கமா பயணிக்கும் கதையில் நாமும் அங்கங்கு அம்மாயி,பாட்டன், பெரியப்பனோடு கதச்சு செட்டி வீட்டை அடைகிறோம்.. கதை சொல்லி ஜீவ கரிகாலன் நம்மையும் கூட்டிச் செல்கிறார். காட்சியாய் விரியும் கதையில் நாமும் விவாதிக்கிறோம்..
சமையல் செட்டி தூத்துக்குடி கேசரி ஸ்பெஷலிஸ்ட்.
சமையல் செட்டி செய்தது தூத்துக்குடி கேசரி இல்லண்டு ஒரு விவாதம் கிளம்புகிறது.
கேசரி ஸ்பெஷல்… (எனக்கு இப்போ வேணும் ) நா அதுல தூத்துக்குடி போட்டேன் தூத்துக்குடி போட்டென்னு செட்டி சொல்ல, பொய்ன்னு சொல்கிறார் அருள்.
இப்படியான ஒரு சுவைமிகு உரையாடல் முடிவில் தெரிகிறது செட்டி கேசரியில் போட்டது ” டூட்டிஃப்ரூட்டி”
இடையில் கதை நகர்த்தியிருக்கும் விதம் செம ரகள..
உப்ஃஃ.. சிரித்துச் சிரித்துக் கண்ணில் நீர்..
ஜீவ கரிகாலன் ஒவ்வொரு கதையும் ஒருவிதமாக எழுதியுள்ளார்..
தொடர்ந்து எழுதுவேன்..
#செட்டியார் சமையல் * என்பது சரியாக இருக்காது. கல்யாணங்களில் சமையல் செய்பவர்கள் செட்டு சமையல்க்காரர்கள் என அழைக்கப்படுவர். செட்டு சமையல் என்பது திரிந்து செட்டி சமையல் பின் செட்டியார் என திரிந்து விட்டது போலும்..
நிற்க, அந்தச் சமையல் செட்டி என் உணர்வுகளில் சற்று பருமனான, நறைத்த நெளி முடியோடு, நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்து, முரட்டு குழந்தை போல் பிடிவாதம் நிறந்தவராக ஒரு காட்சி எனது நினைவுகளில்.
நிற்க, இடுப்பில் ஒரு மனிபர்ஸ் வக்கப்பட்ட பச்சை பட்டை பெல்ட் அனிந்திருப்பார் போலும்… வெகுளியாக ஒரு புறம் இருந்தாலும் , மிகவும் பிடிவாதமான , ஒரு மனிதன் போலும்… கொஞ்சம் மொன்னை நாக்கோ?? அருமை.. ஜீவாவிடம் இத்தகைய ஹாஸ்யம் நிறைந்து இருப்பது வரவேற்கத்தக்கது..
இன்று கேசரி ஸ்பெஷல்.