எப்போதும் என் எழுத்துக்கள் ஜனங்களின் குரலாகவே இருக்கின்றன. எப்போதும் என் கவிதைகள் ஜனங்களின் ஆன்மாகவே இருக்கின்றன. ஒரு பூர்வீக இனத்தின் வாழ்வு ஒரு பெரும் அபாயக் குழியில் தள்ளப்பட்டிருக்கிற நிலையில் இந்தக் கவிதைகளை எழுதுவதற்கு நான் எடுத்துக் கொண்ட தீர்மானத்தை உங்களால் புரிந்துகொள்ள இயலும். நம் மனங்களில் உழலும் அதே தேசம்தான் என் எழுத்திலும் துருத்துகிறது. நான் எனது தேசத்தை எழுத்தில் சுமப்பேன். நான் ஸ்ரீலங்கன் இல்லை என்பது எமது பிரகடனம் அல்ல. அது புறக்கணிப்பினால், ஒடுக்குமுறையினால், இன அழிப்பினால் எழுந்த குரல்.