ஞானக்கூத்தன் வெவ்வேறு காலகட்டங்களில் அளித்த நேர்காணல்களின் தொகுப்பு இது. இந்த உரையாடல்களில் அவர் தமது கவிதையியல், அரசியல் பார்வை, சொந்த வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். தமிழ், வடமொழிப் புலமை, கலைத் தூய்மைவாதம், திராவிட இயக்க எதிர்ப்பு, இலக்கியவாதிகளின் அரசியல், கலையின் கோட்பாடுகள் முதலியவை பற்றிய நேரடியான கேள்விகளுக்குத் தெளிவாகப் பதிலளித்திருக்கிறார் ஞானக்கூத்தன். தமிழ் இலக்கியத்தின் முன்னோடி ஒருவரின் பல பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன இந்தப் பேட்டிகள்.