தி. ஜானகிராமனைக் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் சுகுமாரன் எழுதிய கட்டுரைகள், குறிப்புகளின் தொகுப்பு ‘மோகப் பெருமயக்கு’. ஓர் எழுத்தாளர் மீதான மாறாப் பற்றையும் அவரது எழுத்துகளில் உணர்ந்த கலை நுட்பத்தையும் இந்த நூல் கொண்டிருக்கிறது.
நவீனத் தமிழின் எழுத்து மேதைகளில் ஒருவரான தி. ஜானகிராமன் நூற்றாண்டில் வெளியாகும் இந்த நூல், இலக்கிய வாசகர் தனது விருப்பத்துக்குரிய எழுத்தாளருக்குச் செலுத்தும் நன்றிக்கடன். பின் தலைமுறை இலக்கியவாதி தனது முன்னோடிக்குப் படைக்கும் கைம்மாறு.