பல நூற்றாண்டுகளுக்கு முன் செய்யுள் வழக்கை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட இலக்கண விதிகளையே தமிழ்மொழியின் பயன்படு தன்மைக்கான அளவுகோலாக முன்னிறுத்துகிறோம். இது உரைநடைக் காலம். அதற்கேற்பத் தமிழ் அன்றாடம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு நவீனமாகி வருகிறது. எழுத்து வடிவம், சொற்கள், தொடரமைப்பு என அனைத்திலும் பல மாற்றங்கள். இன்றைய வெளிப்பாடு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களும்தான். இவற்றைக் கருத்தில்கொண்டு மொழிப் பயன்பாட்டு நோக்கில் இந்நூலை உருவாக்கியுள்ளார் அரவிந்தன். எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் செம்மையராகவும் ஒருசேரச் செயல்பட்டு ஊடகத்துறையில் பல்லாண்டுகளாக அவர் பெற்ற அனுபவத் தொகுப்பு இது. ஊடகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பெரிதும் உதவும் அரிய கையேடு இந்நூல். – பெருமாள்முருகன்