பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும்பினியாரின் சத்திர நீதிமன்றக் காவல்துறையில் ‘இரண்டாவது நயினார்’ என்ற பொறுப்பான பதவி வகித்த வீராநாய்க்கர் எழுதிய நாட்குறிப்பு – சரித்திரமாக அக்காலத்து வாழ்வுமுறைகளையும் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மகாராட்டிரம், வங்காளம் ஆகியவற்றிற்கிடையே நிலவிவந்த உறவு, பகை, பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர் இவர்களிடம் கொண்டிருந்த உறவையும் பகையையும் படம்பிடித்துக் காட்டுகிறது. ஐதர் அலி ஆட்சி, திப்பு சுல்தான் ஆட்சி, பிரெஞ்சுப் புரட்சிக்கு விளக்கம், புதுவை மக்களின் எழுச்சி, தென்னிந்திய வரலாறு தமிழ் வரலாற்றின் இணைப்பு, ஐரோப்பிய வரலாற்றின் பாதிப்பு பற்றிய விளக்கங்களை உள்ளடக்கியது ‘இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு’.