தனியாக பயணம் செய்தால், நமக்கு நாமே அறிமுகம் ஆவோம். நண்பர்களுடன் பயணம் செய்தால், மகிழ்ச்சியில் நம்மை நாமே மறந்து போவோம். சில பயணங்கள் நண்பர்களால் தடைப்பட்டுப் போயிருக்கலாம். ஆனால் பல பயணங்கள் நண்பர்களால்தான் மறக்கமுடியாத பயணங்களாக, பசுமையான நினைவுகளாக என்றும் மனதில் நிறைந்து இருக்கும். நியூயார் பயணம் என்ற இந்த புத்தகத்தை படித்த முடித்த பிறகு, உங்கள் நண்பர்களுடனோ அல்லது குடும்ப உறவுகளுடனோ அல்லது தனியாகவோ, நீங்கள் மேற்கண்ட பயணங்கள் பற்றிய நினைவுகள் வந்தால், அதுவே இந்த புத்தகத்திற்கு கிடைக்கும் ஆகச் சிறந்த பரிசு.