ஒரு நகரமும் ஒரு கிராமமும் பேராசிரியர் எஸ். நீலகண்டன் அவர்களின் ‘ஒரு நகரமும் ஒரு கிராமமும்’ என்னும் நூல், கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளில் ஒரு நகரமும் ஒரு கிராமமும் அடைந்துள்ள மாற்றங்களைக் கள ஆய்வும் சுய அனுபவமும் கலந்து சுவாரஸ்யமாக விவரிக்கிறது. சமூக ஆய்வுக்கு ஏராளமான தரவுகளைக் கொண்டிருக்கும் இந்நூல் மிகுந்த வாசிப்புத்தன்மை கொண்டிருக்கிறது. ஆசிரியரின் பன்முக நோக்கு கொண்ட ஆய்வுப் பார்வை தரவுகளைச் சேகரிப்பதிலும் அவற்றை முறைப்படுத்தி விளக்குவதிலும் செயல்பட்டுள்ளது. வெளிச்சத்திற்கு வராத சாமானிய மனிதர்கள் பலர், புனைவிலக்கியம் ஒன்றில் உருப்பெறும் பாத்திரங்கள் போல வடிவம் பெற்றுள்ளனர். அவர்களின் சாதனைகளும் உரிய கவனத்தோடு பதிவுகளாக்கப்பட்டுள்ளன. வளர்ச்சியை அங்கீகரிக்கும் அதேசமயம் சுற்றுச்சூழல், வேளாண்மை முதலியவை மீதான அக்கறையையும் விரிவாகப் பதிவுசெய்யும் புதுவகை ஆய்வுநூல் இது.