தமிழகத்தில் அடிமைமுறை பற்றிய நூல்கள் மிகக் குறைவு. ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் ‘தமிழகத்தில் அடிமைமுறை’ நூல் குறிப்பிடத்தகுந்தது. அந்த வரிசையில் வருவது அ.கா. பெருமாளின் இந்த நூல். இதில் இருப்பவை அடிமைமுறை தொடர்பான மூல ஆவணங்கள். நாட்டார் வழக்காறுகளின் வழியும் பண்பாட்டு வரலாற்றை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசிவரும் அ.கா. பெருமாள், இந்த நூலில் அதைப் பெருமளவில் பாவித்திருக்கிறார். இந்நூலின் முன்னுரை அரிய பல செய்திகளைக் கூறுவது. தென்குமரியில் உள்ள சில சாதிகளைப் பற்றிய அரிய செய்திகளைக் கதைப்பாடல்கள் வழி மீட்டெடுத்திருக்கிறார் பெருமாள். கடின உழைப்பு நூலில் தெரிகிறது.