சைவசமய விழாக்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சிவராத்திரி விழாவின்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்தர்கள் இரவு முழுக்க 108 கி.மீ. தொலைவு நடந்து சென்று பன்னிரண்டு சிவன் கோயில்களைத் தரிசிக்கும் நிகழ்வையும், அக்கோவில்களையும் பற்றிய வரலாற்று நூல் இது. பக்தி என்ற எல்லையைத் தாண்டி கோவில்களின் சமூகப் பின்னணியையும் கலைநுட்பங்களையும் விவரிப்பது இந்நூலின் சிறப்பு. தமிழகத்தில் இதுபோன்ற ஒரு யாத்திரை கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே நிகழ்கிறது.