டப்ளின் எழுச்சி ஆங்கிலேய அரசிற்கு எதிராக 1916ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதிவரை நடந்தது. எழுச்சியில் பங்கு பெற்றவர்கள் ஐரிஷ் குடியரசை அமைக்க விரும்பினார்கள். பிரிட்டன் அப்போது முதல் உலகப் போரில் சண்டை செய்துகொண்டிருந்ததனால் அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என எண்ணினர். பிரிட்டனின் எதிரியான ஜெர்மனியின் உதவியையும் எதிர்பார்த்தனர். எழுச்சியின் ஆரம்ப நாட்களில் ஐரிஷ் போராளிகளின் கை ஓங்கியிருந்தது. ஆனால் பிரிட்டனின் ராணுவ பலத்திற்கு முன்னால் அவர்களால் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எழுச்சியின் முக்கியத் தலைவர்கள் பிடிக்கப்பட்டு மரண தண்டனையைச் சந்தித்தார்கள். எழுச்சி நடந்த நாட்களில் டப்ளினில் இருந்தவர் எழுத்தாளர் ஜேம்ஸ் ஸ்டீஃபன்ஸ். அவர் தெருத்தெருவாகச் சென்று எழுச்சி முதலில் வலுப்பெற்று பின்னர் முழுவதும் அடங்குவதைப் பார்த்தவர். அவருடைய மறக்க முடியாத பதிவு இது. ‘டப்ளின் எழுச்சி’ இன்றும் புதிதாக இருக்கிறது.