“என் வீட்டிற்கு ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சியின் காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப்பு நிறைந்ததாக இருந்தது. அந்தச் சூழலில் இயற்கையுடன் நான் கொண்ட தோழமை என் மனதிற்கு அமைதியைத் தந்தது. குன்றுகளோடும் மரங்களோடும் அனைத்துவகை விலங்குகளோடும் நேசம் கொண்டவளாக நான் வளர்ந்தேன். இயற்கையுடனான நெருக்கம் ஒருவர் ஒருங்கிணைவான ஆளுமையாக உருவாகத் துணைபுரிகிறது என்பதை எப்போதும் நான் உணர்கிறேன் (…)” – இந்திரா காந்தி 24 நவம்பர் 1969