தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் புதிராக வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா. அவரளவுக்கு மகத்தான வெற்றிகளையும் கடுமையான சரிவு களையும் கண்டவர்கள் அரிது. அவற்றுக்கு ஆதாரமான அவரது வாழ்க்கை சமநிலையில் நின்று எழுதப்படவில்லை. மூத்த எழுத்தாளரும் இதழாளருமான வாஸந்தி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை – புகழ் மாலையை அல்ல – எழுதி யிருக்கிறார். உண்மையான பின்னணி, திரட்டிய தகவல்கள் மூலம் ஜெயலலிதாவின் வாழ்வை ஆராய்கிறார். ஒரு இதழாளராக அவரது செயற்பாடுகளை வெளியரங்கில் வைப்பதுடன் படைப்பாளராக அவரது மனப்பாங்குகளையும் உணர்ச்சிகர மான போக்குகளையும் நெருங்கி விவரிக்கிறார்; அறிய எத்தனிக்கிறார். ஒரு பெண்ணாக ஜெயலலிதாவைக் கண்முன் கொண்டு வருகிறது இந்த வாழ்க்கை வரலாறு.