இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம்; ஏனெனில் அவனுக்கும் – நம்மில் பலருக்குப்போலவே – நாளை மற்றுமொரு நாளே!. ஜி. நாகராஜன்: ஜி. நாகராஜன் (1929 – 1981) ஜி. நாகராஜன் மதுரையில் பிறந்தார். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர். பட்டதாரி. ‘குறத்தி முடுக்கு’ குறு நாவலும் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இவ ருடைய தமிழ், ஆங்கில படைப்புகளின் முழுமையான தொகுப்பு ‘ஜி. நாகராஜன் ஆக்கங்கள்’ (காலச்சுவடு பதிப்பகம், 2007). மனைவி : நாகலட்சுமி மகள் : ஆனந்தி மகன் : கண்ணன்