‘தகர்‘ என்ற சொல்லுக்கு ஆண் செம்மறி ஆடென்று பொருள். தமிழ் இலக்கியச் சூழலில் கிடாமுட்டுச் சண்டைகளை மையப்படுத்தி வேறு எந்த நாவலும் வந்ததாக நினைவில்லை. ‘தகர்’ அவ்விடத்தை நிரப்பும் என்பதில் சந்தேகமில்லை. சடையன், வளவன், அம்மு, கடம்பராயர், இளநாட்சி, வெண்மணி, தம்படித்தேவர், மூக்காயி கிழவி ஆவுடை, அருவி, ஊமையன் என கதை மாந்தர்கள் அனைவரும் மறக்கவியலாத புனைவு மனிதர்கள். செவலையைப் போன்று வீரம் சிறந்த ஆடுகள் ஊர் புறத்தில் உண்டு. படிக்கப் படிக்க அந்த உலகத்தில் வாழ்ந்தது போன்ற பூரிப்பு கிடைக்கும்.
ஆசிரியர் தெரிசை சிவா கதை சொல்லுதலில் வேறொரு நிலையை அடைந்திருப்பதை அத்தியாயம் தோறும் உணர முடியும். நடுகல்லை குறித்தும், கள்ளூட்டைக் குறித்தும் எழுதியவைகள் கண்முன்னே காட்சிகளாக ஓடுகிறது. சதா அதிகாரத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சக மனிதர்களுக்கு, இந்த நாவல் வெளிச்சத்தைக் கொடுக்கும்.மேலும் படிப்பவர் மனதில் புதிய திறப்புக்களை உருவாக்கும்.
தெரிசை சிவா
தெரிசை சிவா கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனங்கோப்பில் பிறந்தவர். வேதியியல் முனைவர் பட்டம் பெற்ற இவர் ஆரம்பத்தில் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கி, தற்போது துபாயில் எண்ணெய் நிறுவனத்தில் பணி செய்கிறார்.
இதுவரையிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவருடைய ‘சடலச்சாந்தி’ கதை பரவலான கவன் ஈர்ப்பைப் பெற்றது. குட்டிக்கோரா, திமில், தாச்சி என்ற சிறுகதைத் தொகுப்புகளையும், ரூபிணி என்ற நாவலையும் எழுதியுள்ளார். கிடாமுட்டுச் சண்டைகளை மையப்படுத்தி எழுதிய ‘தகர்’ இவரது இரண்டாவது நாவல்.
Reviews
There are no reviews yet.