நித்தியப் புதுமையும் நித்தியப் பழமையுமான உயிர் ஒன்று, உனக்கும் எனக்கும் வேறு வேறாகத் தெரியும் உயிர்களுக்கும் அப்பால் வசிப்பதன் தடையங்களை, அதன் மூச்சை உணரவைப்பதுதான் ஆனந்த் தொடர்ந்து செய்யும் முயற்சி. நபர்களுக்குப் பின்னாலிருக்கும் அந்த ஓருயிரை அடையாளப்படுத்தும் தருணங்களின் தொகுப்புதான் ‘நான் காணாமல் போகும் கதை’. ஆனந்த்: ஆனந்த் கவிஞர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர். மனநல ஆலோசகராகவும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார். ராபர்ட்டோ கலாஸ்ஸோவின் ‘க’, ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’, யோஸே ஸரமாகோவின் ‘அறியப்படாத தீவின் கதை’ ஆகிய நூல்களையும் மொழிபெயர்த்திருக்கிறார். மின்னஞ்சல்: anandh51ad@gmail.com