சகர்வான், தன்னை யானையைக் கட்டி மேய்த்த பணிக்கரின் பேத்தி என்று சொல்லிக் கொள்கிறார். அது பொய்யோ புனைவோ அல்ல. தன்னை உதாசீனம் செய்த கணவனை உதறிவிட்டு தன் உழைப்பின்மூலம் குடும்பத்தைப் பேணுகிறாள்; செல்வத்தை திரட்டுகிறாள்; ஆண்களிடையே சரிசமமாக நின்று போராடி தன்னை நிறுவுகிறாள். தாத்தா பணிக்கரின் யானை, உயிருள்ள விலங்கு. பேத்தி சகர்வானின் யானை, உருவமற்றது. அதற்குப் பல பெயர்கள்; உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை. ஸர்மிளா ஸெய்யித்: ஸர்மிளா ஸெய்யித் (பி.1982) இலங்கையின் ஏறாவூரில் பிறந்தவர். இதழியல், கல்வி முகாமைத்துவம், உளவியல் துறைகளில் பயின்றுள்ளார். பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர். சமூகச் செயற்பாட்டாளர். இது இவரது முதல் நாவல். முந்தைய படைப்பு ‘சிறகு முளைத்த பெண்’ (கவிதைகள், 2012). மின்னஞ்சல்: sharmilaseyyid@yahoo.com