இச்சிறியதொரு நாவலில் வாசகனுக்கு மாபெரும் வாழ்க்கைச் சித்திரத்தை அளிக்கிறார் டயான். நுட்பமான நேர்த்தியான படைப்பு. சொற்கள் வாசக மனங்களில் எழுப்பும் பிம்பங்கள் பற்றிய துல்லியமான அவதானம் நூலாசிரியரிடம் இருக்கிறது. நாவலின் ஒரு சொற்றொடர் நம் மனவோட்டத்தை வேறொரு தளத்திற்கு இட்டுச் சென்றுவிடும் நுட்பம் வியப்பூட்டக்கூடியது. டயான் ப்ரோகோவன்: டயான் ப்ரோகோவன் (பி. 1976) ஃப்ளெமிஷ் எழுத்தாளர், பத்திரிகையாளர். 1998 முதல் இலக்கியம் படைத்துவருகிறார். ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’, உலகின் பலமொழிகளில் பிரசுரிக்கப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜெர்மன் மொழியில் மட்டும் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. மூன்று குழந்தைகளுக்குத் தாயான இவர் தற்போது பெல்ஜியம் நாட்டில் வசித்துவருகிறார்.