மண்ணை இழந்த மனிதர்களையும் மனிதர்கள் இழந்த மண்ணையும் பற்றிய கதை; போராட்டத்தின் பெயரால் தமது வாழ்வைத் தொலைத்த எளிய மக்களின் பெரும் துயரத்தின் ஆவணம் இந்த நாவல். வாழ்வனுபவங்களிலிருந்து அவர்கள் பெறும் பாடங்கள் அவர்களை அசாதாரணமான பாத்திரங்களாக மாற்றுகின்றன. பார்த்து அறியக்கூடிய கிராமக் காட்சியின் அறியப்பெறாத உள்ளோட்டங்களை ‘வெள்ளாவி’க்குப் பிந்தைய இந்நாவலில் வெற்றிகரமாக முன்வைக்கிறார் விமல் குழந்தைவேல். விமல் குழந்தைவேல்: விமல் குழந்தைவேல் (1960) இலங்கையின் அம்பாறை மாவட்டத்து அக்கரைப்பற்றுப் பிரதேசத்தின் கோளாவில் கிராமத்தில் பிறந்து வளர்ந்த விமல் குழந்தைவேல் 1988இல் புலம்பெயர்ந்தவர். 1990களில் எழுதத் தொடங்கிய இவர் இதுவரை 4 சிறுகதைத் தொகுதிகளும் 2 நாவல்களும் எழுதியுள்ளபோதிலும் இவரை வெளிச்சம் காட்டியது ‘வெள்ளாவி’ நாவலே. ‘கசகறணம்’ நாவலே தனது ஆத்மார்த்தமான படைப்பென்கிறார் விமல். தொலைபேசி : 0044 7453982233 மின்னஞ்சல் : veerathask@gmail.com