தமிழ்ப் பத்திரிகைகள் கொண்டு வந்து தள்ளும் ஆபாசத்திலிருந்து முற்றிலும் மாறான கலைப் படிவங்கள் ஜி. நாகராஜனின் கதைகள். பச்சைக் கதைகளும் – சிவப்புக் கதைகளும் படித்துப் பழக்கமானவர்களுக்கு ஜி. நாகராஜன் முற்றிலும் மாறுபட்ட, ஜீரணிக்க முடியாத எழுத்தாளராக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. இப்படி இருப்பதுதான் அவரின் தனித்தன்மை என்று படுகிறது. ஜி. நாகராஜன்: ஜி. நாகராஜன் (1929 – 1981) ஜி. நாகராஜன் மதுரையில் பிறந்தார். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர். பட்டதாரி. ‘குறத்தி முடுக்கு’ குறு நாவலும் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இவ ருடைய தமிழ், ஆங்கில படைப்புகளின் முழுமையான தொகுப்பு ‘ஜி. நாகராஜன் ஆக்கங்கள்’ (காலச்சுவடு பதிப்பகம், 2007). மனைவி : நாகலட்சுமி மகள் : ஆனந்தி மகன் : கண்ணன்