1990 காலப் பகுதிகளில் இலங்கையின் போர்க்காலப் பகைப்புலத்தில் கிழக்கின் ஒரு முஸ்லிம் கிராமத் தளத்தில் இயங்கும் இந்நாவல் அக்கால மக்களையும் போர்க்காலச் சூழலையும் இயல்பாக வடிவமைத்துக் காட்டுகிறது. சுந்தர ராமசாமி 75 இலக்கியப் போட்டியில் தனது ‘நட்டுமை’ நாவலுக்கு முதற்பரிசு பெற்றவரும், ‘வெள்ளி விரல்’ என்ற தனது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை அரசின் தேசிய மற்றும் மாகாண சாகித்ய விருதுகளை ஒரே ஆண்டில் (2011) பெற்றவருமான, ஆர்.எம். நௌஸாத்தின் மற்றுமொரு படைப்பு ‘கொல்வதெழுதுதல் 90’.