வாழ்க்கை சுவையானது. அதை வண்ணமயமாக மட்டும் வாழ முடிகிறதா? நீரில் ஒரு கோடு கிழித்ததைப்போல காயமின்றியும் வாழ முடிகிறதா? பிறப்புக்கும் முன்னாலேயே நம் மேல்தோல்களிலும் இருதயத்திற்குள்ளேயும் ‘இறக்கியருளப்படும்’ அநாமதேயச் சுவடுகள் ஒவ்வொருவரையும் எப்படி வளைத்து நெளித்து உருளவிடுகிறது என்பதை நயமாகவும் நகைச்சுவையோடும் சற்றே அதிர்ச்சி மதிப்பீட்டோடும் சொல்லும் குறுநாவல்கள் இவை. தாஜ்: தாஜ் (பி. 1950) அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் இளங்கலை படித்திருக்கிறார். சவூதி அரேபியா, மலேசியா, ஹாங்காங், துபாய் ஆகிய நாடுகளில் பணிபுரிந்திருக்கிறார். தற்போது ரியல் எஸ்டேட் மீடியேட்டர் தொழில்புரிந்துவரும் இவரின் சொந்த ஊர் சீர்காழி.