அனாரின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது. முன்னர் வெளிவந்த மூன்று தொகுப்புகளின் செறிவுடன் புதிய வீச்சை உட்கொண்டிருக்கும் கவிதைகள். பெண்ணை இயற்கையின் பகுதியாக மட்டுமல்ல; இயற்கையாகவும் சமூகத்தின் அங்கமாகவல்ல; சமூகமாகவும் ஆணின் சார்பாகவல்ல; ஆணை நிர்ணயிப்பவளாகவும் மாறும் மானுட மனதின் சொற்பெருக்கு இந்தக் கவிதைகளின் ஆதாரம். ‘இறைவனைத் தொடுவதும் மருதாணி இடுவதும் ஒன்று’ என்று நம்பும் இம்மை சார்ந்த மனதின் கவிதைமுகம் நூலில் வெளிப்படுகிறது.